புதன், 21 ஜூன், 2017

ஆம்புலன்ஸ் மறுப்பு: சிசுவின் உடலை கையில் சுமந்து சென்ற பெற்றோர் June 21, 2017


ஆம்புலன்ஸ் மறுப்பு: சிசுவின் உடலை கையில் சுமந்து சென்ற பெற்றோர்

ஒடிஷாவில், அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிசுவை, சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வழங்கப்படாததால், தந்தையே சிசுவின் உடலை கையில் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர் உடலை குடும்பத்தினர் கொண்டு செல்வதற்கு அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காத சோக நிகழ்வுகள் வடமாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒடிஷாவின் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மலைவாழ் இன பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

எனினும், உடல்நலக் கோளாறு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் சிசு, எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. குழந்தையின் பெற்றோர், சிசுவை சுமந்து செல்ல வாகனம் ஏற்பாடு செய்ய அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போதும், வாகனம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மாற்று வாகனத்தில் சிசுவின் உடலை கொண்டு செல்லவும் போதிய பணம் இல்லாத காரணத்தால், அந்த ஏழைத் தம்பதியர், சிசுவின் உடலை மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு கையிலேயே சுமந்து சென்றனர்.

Related Posts: