ஆக்ராவில் காவலர் ஒருவர் தங்கும் விடுதியில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம், காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவின் சிகந்தரா பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், பஷ்சிம்புரி காவல்நிலைய எஸ்.ஐ. ராகுல் ராணா என்பவர், நேற்று இரவு தங்கியுள்ளார். அவர் தங்கிய விடுதி அறையில் இருந்த குளிரூட்டி சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த எஸ்.ஐ. ராகுல் ராணா, பஷ்சிம்புரி காவல்நிலையத்திற்கு சென்று, காவலர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் விடுதிக்கு வந்தார்.
அதனைத் தொடர்ந்து, வரவேற்பறையில் இருந்தவர்களிடம் கடும் வாக்குவாதத்திலும் ராணா ஈடுபட்டார். இந்தக் காட்சிகள் அங்குள்ள CCTV கேமராவிலும் பதிவாகின. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து விடுதி ஊழியர்கள் சிலரை எஸ்.ஐ. ராணா தாக்கியதும் CCTV காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதனிடையே, அந்த விடுதியில் தங்கியிருந்தவர்களிடமும், நள்ளிரவு நேரத்தில் கதவைத் தட்டி தேவையில்லாமல், காவல்துறையினர் விசாரணை நடத்திய சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ. ராணா உள்ளிட்ட காவல்துறையினரின் இந்த அத்துமீறிய செயல் தொடர்பாக, CCTV ஆதாரங்களுடன், விடுதியின் உரிமையாளர், காவல்துறை உயரதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
ரகளையில் ஈடுபட்ட எஸ்.ஐ. ராணா உள்ளிட்ட காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.