புதன், 21 ஜூன், 2017

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை திட்டமிட்டப்படி அமலுக்கு வருகிறது! June 19, 2017

சரக்கு சேவை வரி விதிப்பு வரும் 30ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இப்போது உற்பத்தி வரி, நுழைவு வரி, விற்பனை வரி எனப் பலவாறாக உள்ள வரி விதிப்பு முறைகளை மாற்றிச் சரக்கு சேவை வரி என்கிற ஒரே வரிவிதிப்பு முறையைக் கொண்டுவர, மத்திய மாநில அரசுகள் இணைந்து திட்டமிட்டுள்ளன. 

இந்த வரி விதிப்பு முறை, வரும் ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. ஜூன் முப்பதாம் தேதி இரவு டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில், இது முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

எனினும், ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்ய வியாபாரிகளுக்கு 2 மாத காலம் அவகாசம் வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Related Posts: