புதன், 21 ஜூன், 2017

உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம்! June 21, 2017

உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம்!


உலகிலேயே மிகப்பெரிய சூரிய ஒளி மின்னாற்றல் உற்பத்தி நிலையம் சீனாவின் ஹுவாய்னான் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. 

நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியவற்றைப் பயன்படுத்தி மின்னாற்றல் உற்பத்தி செய்வதால் கரிப்புகை வெளியாகி புவி வெப்பமடைகிறது. இதைத் தடுக்கப் பல்வேறு நாடுகளும் காற்றாலை, நீர்மின், சூரிய ஒளிமின் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. சீனாவும் மரபுசாரா எரியாற்றல் உற்பத்தியில் களமிறங்கியுள்ளது. 

இந்நிலையில், அனுய் மாகாணத்தில் ஹுவாய்னான் என்னும் நகரில் உலகிலேயே மிகப்பெரிய சூரிய ஒளிமின்னுற்பத்தி நிலையத்தைச் சீனா கட்டி முடித்துள்ளது. எட்டு லட்சம் சதுர மீட்டர் பரப்புள்ள இந்த அமைப்பு மூலம் 40மெகாவாட் மின்னாற்றல் உற்பத்தி செய்து 15ஆயிரம் வீடுகளுக்கு மின்னாற்றல் வழங்க முடியும். ஒரு காலத்தில் நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல்மின் நிலையமாக விளங்கிய ஹுவாய்னான் நகரில் இனி மாசுபடாமல் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
மிகப்பெரிய ஏரியின் மீது, 1,60,000 எண்ணிக்கையிலான போட்டோ ஓல்டிக் பேனல்கள் வரிசையாக அடுக்கப்பட்டு இந்த மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதையடுத்து இந்த ஒப்பந்ததை முன்னின்று செயலாற்றும் பொறுப்பும், வாய்ப்பும் தற்போது சீனாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related Posts: