புதன், 30 மார்ச், 2016

தென்மாவங்களில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் !


tuticorin_7
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொடர்ந்து பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தென்மாவங்களில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் மூலமாக 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் சமீபகாலமாக இங்குள்ள யூனிட்டுகளில் தொடர் பழுது ஏற்படுவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த 25ம் தேதி 1 வது யூனிட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக அந்த யூனிட்டின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. மின்மாற்றத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக உடனடியாக மீண்டும் நிறுத்தப்பட்டது. 

இதை அடுத்து சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 2 வது யூனிட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.