புதன், 21 ஜூன், 2017

உத்தரபிரதேச முதலமைச்சருக்கு எதிராக தைரியமாக வழக்கு தொடர்ந்த பழங்குடியின பெண்! June 21, 2017

உத்தரபிரதேச முதலமைச்சருக்கு எதிராக தைரியமாக வழக்கு தொடர்ந்த பழங்குடியின பெண்!


உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக எம்.பி ராம் பிரசாத் ஷர்மாவுக்கு எதிராக பழங்குடியின பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அஸ்ஸாமை சேர்ந்த லஷ்மி ஓராங் எனும் பழங்குடியின பெண் துணை மாவட்ட நீதித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்பாக கவுஹாத்தியில் போராட்டம் ஒன்றின் போது எடுக்கப்பட்ட தனது நிர்வாணப்படத்தை தற்போது பேஸ்புக்கில் பகிர்ந்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். 

“எவ்வித அடிப்படையான உண்மைகளையும் தெரிந்துக் கொள்ளாமல், பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறி, 10 ஆண்டுகள் முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட எங்களின் படத்தை பகிர்ந்துள்ளார்”  என லஷ்மி குறிப்பிட்டுள்ளார்.

“பெண்களின் உரிமைக்காக Beti Bachao, Beti Padhao உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து பிரபலப்படுத்தி வரும் நிலையில், அவரது கட்சியை சேர்ந்த முதலமைச்சர் ஒருவர் இதுமாதிரியான செயல்களில் ஈடுபடுவது எம்மாதிரியான ஜனநாயகம்?” எனவும் லஷ்மி ஓராங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ராம் பிரசாத் ஷர்மா, அநீதி இழைக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே படத்தை பகிர்ந்ததாகவும், அந்த பதிவை பகிர்ந்த போது பேஸ்புக்கில் எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் அப்படியே பகிர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பனந்தா சோனோவாலை கடந்த சில நாட்கள் முன்பாக தொடர்புகொண்டு இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும் ராம் பிரசாத் குறிப்பிட்டார். 

Related Posts:

  • [இல்லறம்] [இல்லறம்]நானும் எனது மனைவியும் வீட்டில் தனியாக இருக்கும்போது நிர்வாணமாக இருப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறா? விளக்கம் தரவும்ச… Read More
  • ஜமாஅத்துடன்) தொழுவது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச்சிறப்புடையதாகும்.அறிவிப்பவ… Read More
  • கிட்னியில் கற்கள் கிட்னி கல் என்றால் என்ன?சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த வி… Read More
  • News Read More
  • Dr Zakir Lecture Picture taken - Yesterday (9th June) @ Abuja National Stadium, when Dr Zakir arrived for the lecture. The lectures on "Concept of God in Major … Read More