புதன், 21 ஜூன், 2017

யோகா செய்து நூதன முறையில் போராட்டம்! June 21, 2017

யோகா செய்து நூதன முறையில் போராட்டம்!


ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஆலங்குடியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று யோகா செய்து முழங்கங்களை எழுப்பினர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த கடந்த பிப்ரவரி 15ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனால் அங்கு தொடங்கிய போராட்டம், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டது. ஆனால் மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செயல்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் இரண்டாம் கட்டமாக கடந்த ஏப்ரல் 12-ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். 

இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் தினந்தோறும் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வந்தனர். 71வது நாளான இன்று அப்பகுதி மக்கள் யோகா செய்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

Related Posts: