வியாழன், 22 ஜூன், 2017

தமிழனின் செயற்கைகோளை விண்ணில் ஏவியது அமெரிக்க நாசா, நேரடியாக கண்டு சென்னையில் வெற்றியை கொண்டாடிய ரிஃபாத் மற்றும் குழுவினர் June 22, 2017

தமிழகத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய உலகிலேயே மிகச் சிறிய செயற்கைகோளை அமெரிக்க நாசா இன்று மதியம் விண்ணில் ஏவியது.
சென்னையில் உள்ள ஸ்பேஸ் கன்ட்ரோல் அறையில் அதை நேரடியாக கண்டு வெற்றியை கொண்டாடியுள்ளனர் ரிஃபாத் மற்றும் அவரது குழுவினர்.
விண்வெளி உலக வரலாற்றில் கால் பதித்துள்ளான் தமிழன்! என்ன காரணமோ தெரியவில்லை இந்த செய்தி தேசிய ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவில்லை.
ரிஃபாத் தற்போது சென்னை நியு காலேஜில் முதலாம் ஆண்டு பிசிக்ஸ் சேர்ந்துள்ளார்.