வெள்ளி, 23 ஜூன், 2017

ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளை கண்டறிய புதிய மென்பொருள் June 23, 2017

ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளை கண்டறிய புதிய மென்பொருள்


ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளை கண்டறிய புதிய மென்பொருளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசு பணிகளில் ஏற்படும் தாமதங்கள், மற்றும் அதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் விதமாக ஆன்லைன் மென்பொருள் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மென்பொருள் முதலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டத்தில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த மென்பொருள் அரசின் அனைத்து துறைகளிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழல் அதிகாரிகள் கண்டறியப்பட்டு, உடனடியாக தண்டனை வழங்க எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.