வெள்ளி, 23 ஜூன், 2017

தெலுங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி June 23, 2017


தெலுங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி

தெலுங்கானா மாநிலத்தில் 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க மீட்புக் குழுவினர் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

தெலுங்கானா மாநிலத்திலுள்ள ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் யாலாலா மண்டல் பகுதியில் 60 அடி உயர ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. அந்த கிணறு அருகே விளையாடிக்கொண்டிருந்த வீணா என்கிற சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் சிறுமியை உயிருடன் மீட்க போராடினர். விடிய விடிய மீட்பு பணி நடைபெற்றது. 

மீட்பு பணிக்காக நவீன எந்திரங்களும் அங்கு வரைவழைக்கப்பட்டன. சிறுமி விழுந்த ஆழ்துளை கிணறு பாதியில் தோண்டப்பட்டு கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு என்றும் அதனை மூட பலமுறை அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.