வெள்ளி, 23 ஜூன், 2017

டெல்லியில் பத்திரிகையாளர்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டம் June 23, 2017

டெல்லியில் பத்திரிகையாளர்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டம்


டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தி சேகரிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்ததை கண்டித்து, பத்திரிகையாளர்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதிய ஜனதா சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் இன்று மனுத்தாக்கல் செய்கிறார். அவரது வேட்புமனுவை முன்மொழிவதற்காக முதல்வர் பழனிசாமி டெல்லி வந்துள்ளார். இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தொடர்பான செய்திகளை சேகரிக்க தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களுக்கு அங்கிருந்த தமிழக அதிகாரிகள் சிலர் அனுமதி மறுத்ததுடன், பத்திரிகையாளர்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக 
தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிருப்தியடைந்த பத்திரிகையாளர்கள் நேற்றிரவு 7 மணி முதல் தமிழ்நாடு இல்லம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவைக் கடந்த பிறகும் கூட அதிகாரிகள் தரப்பில் இருந்து யாரும் வந்து பேச்சு நடத்தவில்லை என விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.