வெள்ளி, 23 ஜூன், 2017

மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி ஓடும் ரயிலில் இளைஞர் அடித்துக் கொலை! June 23, 2017

மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி ஓடும் ரயிலில் இளைஞர் அடித்துக் கொலை!


டெல்லியில் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி இளைஞர்கள் நால்வர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரமலான் திருநாளிற்காக பொருட்கள் வாங்கச் சென்ற 4 இளைஞர்கள் மீது யார்யென அடையாளம் தெரியாத குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். நால்வரும் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி தாக்குதல் நடத்தப்பட்டதாக India Today செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பல்லப்கிராவின் பல்லப்கிராவின் கண்டவளி கிராமத்தைச் சேர்ந்த ஜுனைத், ஹஷீம், ஷாகிர் மொசின் மற்றும் மொயின் ஆகிய நான்கு இளைஞர்களும் துக்லகாபாத்தில் இருந்து ரயிலில் சென்றுள்ளனர். ரயில் கூட்டமாக இருந்தபோது நால்வரும் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

குற்றவாளிகள் ரயிலில் இருந்து விரைவாக வெளியேறிவிட்டதாகவும், அதனால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.