கலாம் சாட் என்ற பெயரில் கையடக்கச் செயற்கைக்கோள் தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய கரூர் மாவட்ட மாணவனுக்கு தமிழக சட்டப் பேரவையில் வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. அந்த சாதனை மாணவர் மற்றும் அவர் உருவாக்கிய செயற்கைகோள் குறித்த தகவல்கள்..!
அகவை 17.... விண்வெளி அறிவியலில் கொண்ட ஆர்வத்தால் நாசாவின் பாராட்டைப் பெற்றவர் முஹமது ரிபாத் ஷாரூக். இவர் 8 வயதாக இருந்த போது தந்தை இறந்து விட, தாய் அரவணைப்பில் வளர்ந்தவர். படிப்பில் படுசுட்டி இல்லையென்றாலும், விண்வெளி அறிவியலில் சாதனை படைத்துள்ளார் ரிபாத் ஷாரூக்.
பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் போட்டியில் இவரது திறமையை கண்ட ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம், ரிபாத்தை மேலும் ஊக்கப்படுத்தியது. இதன் விளைவாக நாசா நடத்திய `Cubs in Space’ என்ற போட்டியில் வியப்பில் ஆழ்த்தியது ரிபாத் ஷாரூக் குழு. இவர்கள் 64 கிராம் எடையில் உருவாக்கிய கலாம் சாட் எனும் செயற்கைக்கோள், நாசாவால் அங்கீகரிக்கப்பட்டது.
குறைந்த செலவில் உருவான கலாம் சாட் செயற்கைக்கோள் மூலம் பல தரவுகள் கிடைக்கும் என்கிறார் ரிபாத் ஷாரூக். 12-ம் வகுப்பில் 750 மதிப்பெண்களை மட்டுமே எடுத்த இந்த சாதனை மாணவர், மதிப்பெண்களுக்கும், சாதனைக்கும் தொடர்பு இல்லை என்று நிரூபித்திருக்கிறார்.

சாதிக்க விரும்பும் மாணவர்களை மதிப்பெண்களை வைத்து அடக்கி விடக் கூடாது என்கிறார் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் ஸ்ரீமதி கேசன். இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில் பெற்றோர், அதற்கான சூழலை உருவாக்கி தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
இந்த சாதனை மாணவரை பார்த்த பின், இளம் விஞ்ஞானிகளை மேலும் உருவாகும் வகையில், கல்வி திட்டத்தில் மாற்றம் வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.