தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான சாத்தியம் இல்லை என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் ஏதும் நடைபெறவில்லை என கூறினார்.
எதிர்காலத்திலும் அதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரிவதாகவும் கூறிய அவர், மத்திய அரசு எங்கு ஏவுதளம் அமைக்க விருப்பப்படுகிறதோ அங்கு அதற்கானப் பணிகளை இஸ்ரோ மேற்கொள்ளும் என்றும் கிரண்குமார் குறிப்பிட்டார்.
சதிஸ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே 2 ராக்கெட் ஏவுதளம் உள்ள நிலையில், இங்கேயே மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான சாத்தியமும் உள்ளதாக கிரண்குமார் தெரிவித்தார்.