ஞாயிறு, 25 ஜூன், 2017

பாஜக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு குறித்து ஸ்டாலின் விமர்சனம்! June 25, 2017

பாஜக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு குறித்து ஸ்டாலின் விமர்சனம்!


நீட் மசோதாவுக்கு இசைவு தந்தால்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு என்று அதிமுக சார்பில் நிபந்தனை விதிக்காதது ஏன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள தமிழக நலன்களை மத்திய அரசிடம் அடகு வைத்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சட்டமாக்க, மத்திய அரசிடம் வாதாடி உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு தவறிவிட்டதாகவும், அதனை மறைக்க, தற்போது திசைத்திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் 85 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எவ்வகையிலும் உதவாது என அவர் தெரிவித்து உள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெறுவதற்கு, போர்க்கால நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.