ஞாயிறு, 25 ஜூன், 2017

தமிழக பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி புள்ளி விவரம்! June 25, 2017

தமிழக உற்பத்தித் துறையின் வளர்ச்சி விகிதம் 2016-17ம் நிதியாண்டில் 1.56 சதவிகிதமாக சரிந்துள்ளது. 

தமிழக பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி புள்ளி விவரம்!
2015-16ம் நிதியாண்டில் தமிழக உற்பத்தி துறையின் வளர்ச்சி, ஏழு புள்ளி ஒன்று ஒன்று சதவிகிதமாக இருந்தது. இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா அதிகபட்சமாக 10.36 % சதவிகித உற்பத்தி துறை வளர்ச்சியுடன் முன்னிலையில் உள்ளது. 

தெலங்கானா மாநிலத்தின் உற்பத்தி துறை வளர்ச்சி ஏழு புள்ளி ஒரு சதவிகிதமாக உள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்ற அரசியல் தலைவர் யாரும் தமிழகத்தில் ஆட்சியில் இல்லாததே இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணமாக தொழிற்துறையினர் கூறுகின்றனர். 

மேலும், தமிழத்தில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அரசியல் குழப்ப நிலை நிலவி வருவதும் இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது.