10 ரூபாய்க்கு ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என சட்டப்பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை பேரவையில் வெளியிட்ட அவர், ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
225 மில்லி லிட்டர் பாலில் கொழுப்பு 4.5 சதவீதமும், இதர சத்துக்கள் 8.5 சதவீதமும் இருக்கும் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும், 3 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளிகளில் ஆவின் பாலகங்கள் நிறுவ பால்வளத்துறை திட்டமிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் பால் வளத்துறை கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பால்வள திட்டம் ஒன்றின் கீழ், சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, வேலூர் , திருச்சி, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு பால் ஒன்றியங்களில் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட்ட கிராமிய அளவில் பால் கொள்முதல் திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 14 பால் குளிர்விப்பான்கள், 279 தானியங்கி பால் சேகரிக்கும் கருவிகள், 1,333 பால் கேன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பால்வளத் துறை அமைச்சர் பேச்சை புறக்கணித்த ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்தார். விருதுநகர் மாவட்டத்தில் எந்தவொரு வளர்ச்சி திட்டத்தையும் அமைச்சர் செயல்படுத்தவில்லை எனக்கூறி சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் அமைச்சரின் பதிலை புறக்கணித்தார்.