சனி, 1 ஜூலை, 2017

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! July 01, 2017




தீப்பெட்டிக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டியில் இயங்கி வரும்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவங்கி உள்ளது. 

இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தீப்பெட்டி தொழில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூலப்பொருள்களின் விலை உயர்வு, சிறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு வந்த தீப்பெட்டி தொழிலுக்கு, தற்போது ஜிஎஸ்டி மூலம் 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. 

இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், கழுகுமலை பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.