ஞாயிறு, 25 ஜூன், 2017

குர்ஆனை மனனம் செய்த 15 வயதேயான “ஹாபிள்” ஜாவித் கானை குத்தி கொலை செய்த காவி பயங்கரவாத RSS அமைப்பு !

நெஞ்சு பொறுக்குதில்லையே !!!
குர்ஆனை மனனம் செய்த 15 வயதேயான “ஹாபிள்” ஜாவித் கான். குர்ஆனை மனப்பாடம் செய்து விட்டதற்காக தனது தாய் வழங்கிய 1500 ரூபாயை எடுத்துக் கொண்டு தனது சகோதர்ர்களுடன் டெல்லிக்கு புனித ரமலான் பண்டிகை கொண்டாட துணி எடுக்க சென்றவன் ரயிலில் இந்துத்துவ வெறியர்களால் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறான். மாட்டுக்கறி உண்பவர்கள் என்று சொல்லியே அந்த இளம் குருத்தையும், உடன் வந்த சகோதரர்களையும் கத்தியால் குத்தியிருக்கிறது மதவெறி கும்பல்.
யாருக்கும் எவ்வித அநீதியும் இழைக்காத, மத அறிஞருக்கான கல்வி பயின்று வரும் இளம் சிறுவன் நோன்பு வைத்த நிலையில் கொல்லப்பட்டிருக்கிறான். அவனது சகோதரர்கள் மருத்துவமனையில் இருக்கிறார்கள். இவ்வளவையும் மனசாட்சியை கழற்றி வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறது “பெரும்பான்மை” பொது சனம்.
மனிதநேயமற்ற மிருகங்கள் வாழும் தேசமாக மாறி வருகிறது இந்தியா.


source: ANI, kaalaimalar