ஞாயிறு, 25 ஜூன், 2017

இராமநாதபுரத்தில் புரளியை கிளப்பி பெரும் கலவர முயற்சியில் ஆர்எஸ்எஸ் ஐடி விங் ..!

இராமநாதபுரத்தில் உணர்ச்சியை தூண்டும் வகையில் புரளியை கிளப்பி பெரும் கலவர முயற்சியில் ஆர்எஸ்எஸ் ஐடி விங் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் போலியான படங்களையும், தகவல்களையும் பரப்பி வருகின்றனர். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைத்தளத்தில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிக்கும் இஸ்லாமியர் ஒருவருக்கும் நடைபெற்ற தாக்குதலை பயன்படுத்தி மதக்கலவரத்தை தூண்ட ஆர்.எஸ்.எஸ்- ஆதரவாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். அதிலும் தற்போது ஆர்எஸ்எஸ் ஐடி விங் ஒன்று  ஓ.பன்னீர் செல்வத்தை புரமோட் பன்ன பல்வேறு வேலைகளை செய்து வருகிறது. அதற்கு பெயர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு  ஐடி விங் என பெயர் வைத்திருக்கிறது-
அந்த விங் இன்று சமூக வலைத்தளங்களில் போலியாக ஒரு படத்தை போட்டு ராமநாதபுரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தேவர்சாதியினர் முழுவதும் ஒன்று திரண்டு வருகிறார்கள். அதில் தேவரின் தேசபக்தியை சூரிய வெப்பமாய் எழுந்ததை உலகமே வியந்து பார்த்ததாக போட்டிருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் வெளியிட்டிருக்கும் படம் கோவையில் இந்துமுன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்ய பட்ட போது, கோவை டவுன்ஹால் பகுதியில் பஜ்ரங்தள் அமைப்பினர் பூட்டியிருந்த கடைகளை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். சில கடைகளில் உள்ளே நுழைந்து செல்போன்களை திருடிச்சென்றனர். ஒருகடையில் வைத்திருந்த பிரியாணியை அண்டாவுடன் திருடிச் சென்றனர். அந்த கும்பலின் படத்தை போட்டு இராமநாதபுரத்தில் தேவர் இளஞ்சிங்கத்தை வெட்டிய இஸ்லாமியர்களுக்கு எதிராக திரண்ட பலலட்சம் பேர் என அண்டபுழுகை வெட்கமில்லாமல் விஷமாக கக்கி வருகின்றனர்.
இதனை மோடியின் ஆதரவில் செயல்பட்டு வரும் அஇஅதிமுக ஆட்சியும் வேடிக்கை பார்த்து வருகிறது. இது போன்று சாதிய ரீதியாகவும், மதரீதியாகவும் திட்டமிட்டு கலவரத்தை தூண்டி வரும் ஆர்எஸ்எஸ் ஐடி விங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆர்.எஸ்.எஸ்.கும்பலின் உணர்ச்சியை தூண்டும் பொய்பிரச்சாரத்தை நம்பி  இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் எவ்வித கலவரமும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
https://theekkathir.in/2017/06/23/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/