திங்கள், 3 ஜூலை, 2017

குட்கா விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக வெளிநடப்பு! July 03, 2017

குட்கா விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக வெளிநடப்பு!


குட்கா விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததாக கூறி, சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் குட்கா விற்பனை செய்ய, அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் திமுக தொடந்து எழுப்பி வருகிறது. இந்நிலையில், இன்று இவ்விவகாரம் குறித்து பேச திமுக எம்எல்ஏ துரைமுருகனுக்கு இன்று சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார்.

இதனால் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன், வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே முதல்வர் விளக்கம் அளித்துவிட்டதாகவும், எனவே மீண்டும் இது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், குட்கா விவகாரத்தில் பணிநீக்கம் செய்ய வேண்டிய காவல்துறை அதிகாரிக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது தவறான முன் உதாரணமாக உள்ளதாக குற்றம் சாட்டினார். 

Related Posts: