வியாழன், 6 ஜூலை, 2017

தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வி அளிக்கும் அரசு பள்ளி! July 06, 2017




உசிலம்பட்டி அருகே தனியார் பள்ளிக்கு நிகரான கல்வியை தருவதாக தலைமை ஆசிரியர் கொடுத்த வாக்குறுதியின் பேரில் 34 மாணவர்களை கிராம மக்கள் அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கட்டத்தேவன்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், சமீபகாலமாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே சென்றது. 

கடந்த கல்வியாண்டில் வெறும் 29 மாணவர்கள் மட்டுமே பள்ளியில் படித்தனர். அப்பகுதி மக்கள் அரசு பள்ளியை விட்டுவிட்டு தனியார் பள்ளிகளை நாடியதால் இந்த அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. 

இதனிடையே அரசு பள்ளியில் மீண்டும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த தலைமை ஆசிரியர் மாரியம்மாள் இதற்காக சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இதில் கிராம மக்களை அழைத்து, தங்கள் அரசு பள்ளியில் தனியார் பள்ளிக்கு நிகரான கல்வியை தருவதாக உறுதி அளித்தார். 

இதை ஏற்ற கிராம மக்கள் தனியார் பள்ளிகளில் படித்த 34 மாணவர்களை அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்துள்ளனர். தலைமை ஆசிரியரின் இந்த முயற்சியிக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Posts: