பேச்சுவார்த்தைக்கு கட்டுப்படாவிட்டால் வடகொரியா மீது போர் தொடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராக வடகொரியா தொடர்ந்து ஆயுத பரிசோதனைகளை நடத்திவருகிறது. அண்மையில் வடகொரியா ஏவிய ஏவுகணை ஒன்று அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று அமெரிக்காவின் ஹவாய் தீவுக்குச் சென்று தாக்கும் வல்லமையுடையது என கருதப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவைத் தாக்கப்போவதாக பயமுறுத்திக்கொண்டிருக்கும் வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனையால் ஹவாய் தீவில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில், வடகொரியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்கா, இருப்பினும் பேச்சுவார்த்தை மூலம் வடகொரியாவைக் கட்டுப்படுத்தவே விரும்புவதாகக் கூறியுள்ளது. ஆனால், சமரச முயற்சிகளுக்கு உடன்பட மறுத்தால் அந்நாட்டின் மீது போர் தொடுக்கப்படும் என்றும் தெளிவாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.