மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 04 10 2021
சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புகளுக்கான, ’நீட்’ நுழைவுத் தேர்வு பாட திட்டத்தில் தேசிய தேர் வுகள் முகமை கடைசி நேரத்தி மாற்றங்கள் செய்தது. இதனால் நீட் தேர்வு எழுதுபவர்களி டையே குழப்பம் நிலவியது.
இது தொடர்பாக மாணவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், பாட திட்டம் மாற்றப்பட்டது தொடர்பாக பதிலக்க மத்திய அரசுக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது . இந்த வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான நீட் தேர்வு பாடதிட்டத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்களை தயார் செய்வதற்காக ஜனவரி 10, 11ம் தேதிகளுக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/govt-told-supreme-court-that-neet-exams-for-super-specialty-courses-will-be-postponed-to-january.html