திங்கள், 4 அக்டோபர், 2021

உ.பி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு, வீட்டுக்காவலில் அகிலேஷ் யாதவ்

 

உத்தரப்பிரதேச மாநில வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்திக்க சென்ற சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். 04 10 2021 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லகிம்பூர் கேரி மாவட்டத் தை சேர்ந்த விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

இதற்கிடையில், லகிம்பூர் கேரி பகுதியில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராம மான பன்வீர்பூரில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக் கான விவசாயிகள் திரண்டனர். அப்போது அந்த வழியாக பா.ஜ.கவினரின் வாகன அணி வகுப்பு வந்தது. இதில் ஒரு கார் விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

ஆத்திரமடைந்த விவசாயிகள், பா.ஜ.க.வினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். மூன்று கார்கள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன. இதனால், அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வன்முறையை கட்டுப்படுத்த லகிம்பூர் கேரி மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வன்முறையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள் ளது. உள்ளூர் பத்திரிகையாளர் ராம் காஷ்யப் என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.

இதற்கிடையே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இன்று காலை லக்னோவில் உள்ள தனது வீட்டிற்கு முன் தர்ணாவில் ஈடுபட்டார். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களை சந்திக்க, அவர் லகிம்பூர் கேரி செல்ல இருந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவர் வீட்டிற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

source https://news7tamil.live/akhilesh-yadav-detained-after-protest-outside-home-over-9-deaths-in-up.html