திங்கள், 4 அக்டோபர், 2021

உ.பி வன்முறை: 8 பேர் பலியான கிராமத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி கைது?

 

04 10 2021 உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் 8 பேர் பலியான கிராமத்திற்கு சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லகிம்பூர் கேரி மாவட்டத் தை சேர்ந்த விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

இதற்கிடையில், லகிம்பூர் கேரி பகுதியில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராம மான பன்வீர்பூரில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக் கான விவசாயிகள் திரண்டனர். அப்போது அந்த வழியாக பா.ஜ.கவினரின் வாகன அணி வகுப்பு வந்தது. இதில் ஒரு கார் விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பா.ஜ.க.வினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். மூன்று கார்கள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன. இதனால், அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை யை கட்டுப்படுத்த லகிம்பூர் கேரி மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடைவிதிக்கப்பட்ட பன்வீர்பூருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரிய ங்கா காந்தி இன்று காலை சென்றார். அவர் காரை பன்வீர்பூர் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார், அங்கு செல்ல அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவருடன் பிரியங்கா காந்தில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  பின்னர் அவரை ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.


இந்நிலையில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

source https://news7tamil.live/priyanka-gandhi-vadra-arrested-from-ups-hargaon-says-youth-congress-leader-srinivas-bv.html