எல்லை தாண்டி மீன் பிடித்தால் பல கோடி அபராதம் விதிக்கும் இலங்கையின் புதிய சட்டத்திற்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் 10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை இலங்கை நாடாளுமன்றத்தில், அந்நாட்டு மீன் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா தாக்கல் செய்தார். தடை செய்யப்பட்ட இருமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி, மீன்பிடிப்பதை தடுக்கவும் இலங்கை கடற்தொழில் சட்ட மசோதாவில் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்ட மசோதாவின் காரணமாக, கடலில் கால்வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, தமிழக மீனவர்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.