வெள்ளி, 7 ஜூலை, 2017

ஒரு மாணவருக்கு ஒரு மரம் என மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள்! July 07, 2017

ஒரு மாணவருக்கு ஒரு மரம் என மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள்!


நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

60 சதவிகிதப் வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை சரியாக பெய்யவில்லை என கூறப்படுகிறது. காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதே இதற்கு காரணம் என கருதப்படும் நிலையில், மழை பொழிவை அதிகரிக்கும் விதமாக உதகையில் ஒரு மாணவருக்கு ஒரு மரம் என்ற மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது. 

இதன் மூலம், வனபகுதியை அதிகரிக்கவும், மழை பொழிவை மீண்டும் அதிகபடுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இதற்கான ஏற்பாடுகளைச் செய்த தனியார் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. விழாவை நீலகிரி மாவட்ட பொறுப்பு ஆட்சிதலைவர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். 

இதில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் சோலை மரக்கன்றுகளை நட்டனர். முதல் நாளான இன்று ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

Related Posts: