வெள்ளி, 7 ஜூலை, 2017

மாநில அரசுகளை சிதைக்கும் போக்கினை மத்திய அரசு கைவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்! July 07, 2017




மாநில அரசுகளை சிதைத்து, ஆளுநர்கள் மூலம் தனி அரசு நடத்தும் போக்கினை  மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநில துணைநிலைஆளுநர் கிரண்பேடி, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசைச் சிறிதும் மதிக்காமல், மத்திய அரசுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுவது, கூட்டாட்சித் தத்துவத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 
பாஜகவின் மாநில தலைவர் உள்ளிட்ட அக்கட்சியின் மூவரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இவர்களுக்கு ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து பாஜக அரசின் முழுநேர ஏஜெண்டாக ஆளுநர் அரசியல் செய்வது தற்போது உண்மையாகி விட்டதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதே போன்று மேற்கு வங்கம், டெல்லி மாநிலங்களிலிலும்  ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுவதை ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Posts: