வெள்ளி, 7 ஜூலை, 2017

உலகின் முதல் சூரிய ஒளி படகு! July 07, 2017

உலகின் முதல் சூரிய ஒளி படகு!


முழுக்க முழுக்க சூரிய ஒளி மூலம் இயங்கக் கூடிய உலகின் முதல் படகு பிரான்ஸ் நாட்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது. 

பாரீஸ் நகரின் செயிண்ட் மாலோ நதியில் இருந்து உலகை சுற்றவுள்ள இந்த படகு பயணத்தை அந்நாட்டு சுற்றுச் சூழல் அமைச்சர் தொடங்கி வைத்தார். உலகின் எந்த கப்பல்களிலும் இல்லாத வகையில் இந்த படகு மீது முழுவதும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மற்றும்  நைட்ரஜன் உதவியுடன் இயங்கும் இந்த படகு மூலம் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக உலகின் 50 நாடுகளில் 101 இடங்களுக்கு படகு மூலம் செல்ல திட்டமிட்டுள்ளதாக இதில் பிரயாணம் செல்லவுள்ள மாலுமிக் குழு தெரிவித்துள்ளது.

Related Posts: