சனி, 10 செப்டம்பர், 2016

இந்தியாவை தொடர்ந்து, சிங்கப்பூரிலும் விமானத்தில் சாம்சங் கேலக்சி நோட் 7 கைபேசிக்கு தடை

இந்தியாவை தொடர்ந்து, சிங்கப்பூரிலும் விமானத்தில் சாம்சங் கேலக்சி நோட் கைபேசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்சி நோட் 7 கைபேசியை விமானத்துக்குள் சார்ஜ் செய்வதும், ஆன் செய்து இயக்குவதும் தடை செய்யப்படுவதாக சிங்கப்பூர் ஏர் விமான நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதே போன்ற தடையை ஆஸ்திரேலியாவின் குவான்டாஸ் மற்றும் விர்ஜின் நிறுவனங்களும் அபுதாபியைச் சேர்ந்த எத்தியாட் விமான நிறுவனமும் விதித்துள்ளன.