மாநில ஆளுநர்கள் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமித்வராய் ஆகியோர் யோசனை தெரிவித்துள்ளனர்.
அனைத்து அரசியல் சாசன பதவி வகிப்பவர்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையும், பதிலளிக்கும் கடமையையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் கூறியுள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு கோவா மாநில அரசியல் நிலவரம் குறித்து, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய அறிக்கையை , மக்களுக்கு தெரிவிக்குமாறு, மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
ஆனால், அரசியல் சாசன பதவிகள், நாட்டின் இறையாண்மையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால், அவற்றை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவர இயலாது என, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளார்.