சனி, 15 ஜூலை, 2017

உலக வெப்பமயமாதலால் ஆசிய கண்டத்திற்கு பெரும் ஆபத்து! July 15, 2017




உலகவெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பசிபிக் மற்றும் ஆசிய பிராந்தியத்தில் மோசமான பாதிப்புகள் ஏற்படப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

பூமியில் மனித இனம் தொடர்ந்து வசிப்பதற்கான வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து கொண்டே செல்வதாக ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பாட்ஸ்மேன் பருவநிலை தாக்க ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
அதிலும் குறிப்பாக சீனா, இந்தியா, வங்கதேசம் மற்றும் இந்தோனேசியாவின் இதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான ஆண்டாக கடந்த 2016ம் ஆண்டு இடம்பிடித்துள்ளது. மேலும் இந்த 2017ம் ஆண்டிலும் கடந்த ஆண்டைவிட அதிக வெப்பம் பதிவாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அதிகரித்துவரும் உலக வெப்பமயமாதலால் ஆசிய கண்டத்தில் உள்ள சீனா, பங்களாதேஷ் மற்றும் தென் இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயங்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 2030ம் ஆண்டு அரிசி உற்பத்தியில் மிகப்பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த உலக வெப்பமயமாதலாலும் பருவநிலை மாறுபாட்டாலும் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள கடலோர பகுதிகளில் உள்ளவர்களில் 13 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். கடலோரப்பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். 

Related Posts: