ஞாயிறு, 16 ஜூலை, 2017

பிக்பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்டு நடத்தப்படுகிறது : திருமாவளவன் July 15, 2017




தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளவர்களும், அதனைத் தொகுத்து வழங்கும் நடிகர் கமலும் சேரிக்கு வந்து 10 நாட்கள் தங்கியிருந்தால் சேரியில் வசிக்கும் மக்களின் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு புரியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

சென்னை பெரம்பூலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ அந்த நிகழ்ச்சி, பரபரப்பிற்காக, முன்கூட்டிய திட்டமிட்டு நடத்துவதாக தெரிகிறது. சேரி மக்களை இழிபடுத்தும் சொல்லாடல்கள்கூட நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அல்லது நெறிபடுத்துபவர்கள் வேண்டும் என்றே கையாண்டிருக்கின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இப்படியெல்லாம் பேசுவதன்மூலம், இந்த நிகழ்ச்சியை பரபரப்புக்கு உள்ளாக்கமுடியும் என்று வேண்டும் என்றே திட்டமிட்டு செய்திருக்கிறார்கள் என்றுதான் நான் கருதுகிறேன்”. 

“பொதுவாக சேரி மக்கள் என்றாலே, அவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள், ஒழுக்கமில்லாதவர்கள், பண்பாடு இல்லாதவர்கள் என்பதைப் போன்ற தவறான தோற்றம் இந்த சமூகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனுடைய வெளிப்பாடாகத்தன் அந்த நடிகை அவ்வாறு பேசியிருக்கிறார் அல்லது பேசவைக்கப்பட்டிருக்கிறார்.அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நூறு நாட்கள் எங்கோ அமர்ந்து வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருக்கிற அவர்கள், 10 நாட்களுக்கு சேரி பகுதிக்கு வந்து தங்கட்டும்... அப்போது, சேரி மக்களின் பண்பாட்டை, நாகரிகத்தை, மனிதநேயத்தை, இரக்க குணத்தை, அரவணைக்கும் பெருந்தன்மையை அவர்கள் புரிந்துகொள்வார்கள்” என தெரிவித்தார்.

Related Posts: