திங்கள், 16 நவம்பர், 2015

நாட்டுக் கொடியை (Profile picture) ஆக வைத்திருக்கும், வைக்கபோகும் நண்பர்களுக்கு. Pls read & share

பிரான்ஸ் நாட்டுக் கொடியை (Profile picture) ஆக வைத்திருக்கும், வைக்கபோகும் நண்பர்களுக்கு. Pls read & share
பிரான்ஸ் நாட்டின் மீதும், அந்த மக்களின் மீதுமான உங்கள் அபரித அன்பு புல்லரிக்கச் செய்கிறது.பிரன்ஸில் ஆறு இடங்களில் 120 பேர் கொல்லப்பட்டது உங்களுக்குத் தெரியும். அதுதான் இன்றய நாளின் செய்தி.அது தெரிந்த உங்களுக்கு. இதே பிரான்ஸில் நம் இஸ்லாமிய உறவுகள் பட்ட, படுகின்ற துன்பங்கள் உங்களுக்குத் தெரியுமா அல்லது இந்த விபச்சார ஊடகங்கள்தான் உங்களுக்கு அந்த செய்தியை கொண்டு வந்து சேர்த்ததா இல்லை இல்லை இல்லை.
தெரிந்து கொள்ளுங்கள்
2010 ல் பிரான்ஸிய அரசாங்கம் பொது இடங்களில்நிகாபை அணியத் தடை விதித்து சட்டம் இயற்றியதை அந்நாட்டின்பெரும்பான்மை மக்கள் ஆதரித்தது உங்களுக்குத் தெரியுமா.....?
செப்டம்பர் 29,2015ல் பிரான்ஸின் ஒரு தேவாலயத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் முன் சீட்டில் குர்ஆன் இருந்தமைக்காக வெடிகுண்டு பரிசோதகர்கள் (bombs squad) வரவழைக்கப்பட்டு சோதனை செய்தது உங்களுக்குத் தெரியுமா.....?
தெற்கு பிரான்ஸின் பிஸேர்சின் நகரத்தின் மேயர் (ரொபர்ட் பேர்னார்ட்) அந்நகரத்தில் தங்கியிருந்த அப்பாவி சிரிய அகதிகளை "YOU ARE NOT WELCOME HEAR "(நீங்கள் வரவேற்கப்பட வில்லை) என்று விரட்டியடித்ததை கேள்விப்பட்டீர்களா.....?
அதே மேயர் 'கபாப் 'மத்திய கிழக்கு முஸ்லீம்களின் உணவு என்பதால் இனிமேல் எனது நகரத்தில் 'கபாப் 'கடைகளை அனுமதிக்கமாட்டேன் என்று சூழுரைத்த செய்தி உங்களுக்கு வந்ததா.....?
தெற்கு பிரான்ஸில் அவ்ச் (AUCH) நகரின் (SALAM D 'AUCH) பள்ளிவாசல் இரண்டு நாட்களுக்குள் எரிக்கப்பட்ட அனல் உங்களுக்கு அடித்ததா.....?
இஸ்லாத்தை பிரான்ஸில் தடை செய்வதே பிரான்ஸின் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என தெற்கு பிரான்ஸின் நகர மேயர் (றொபர்ட் கார்டன்) பிரான்ஸின் (LA MONDA) பத்திரிக்யில் எழுதிய கட்டூரையை வாசித்தீர்களா.....?
சுமார் 150 முஸ்லிம் பெண் மாணவிகள் நீண்ட ஆடை அணிந்து பிரான்ஸில் பாடசாலைக்குச் சென்றதற்காக மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட செய்தி உங்கள் காதுகளுக்கு எட்டியதா.....?
பிரான்ஸின் (MONETLIMAR) ல் உள்ள பள்ளிவாசல் ஒன்றை வெடித்துச்சிதறவைக்க 16, 17 வயது கொண்ட நான்கு பிரஞ்சு வான்படை இளைஞர்கள் முயர்சித்த கதை காற்றில் வந்தது. கேள்விப்பட்டீர்களா.....?
பாரிசின் (AUBUR) புகையிரத்தில் ஒரு முஸ்லீம் தாயும் அவரின் மூன்று குழந்தைகளும் முஸ்லீம் என்பதற்காக அடித்து உதைக்கப்பட்ட போது சுற்றியிருந்த பிரான்ஸின் பிரஜைகள் வேடிக்கை பார்தார்கள்.அந்த வேடிக்கையை நீங்களும் பார்த்திர்களா.....?
ஹிஜாபை அணிந்து சென்றதற்காக கர்பிணித்தாய் கதீஜா பிரான்ஸின் நகரில் அடிக்கப்பட்டதையும், தகாத வார்த்தையால் திட்டப்பட்டதையும் நீங்கள் காதுகளால் கேட்டீர்களா.....?
(COUNCIL OF EUROPE COMMISSION FOR HUMAN RIGHTS)
வெளியிட்ட அறிக்கையில் பிரான்ஸில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களில் 80சதவிகிதமானவை முஸ்லீம் பெண்களுக்கெதிராக நடைபெறுகின்றது என குறிப்பிட்டிருந்ததை நீங்கள் வாசித்தீர்களா.....?
சிரியாவிற்கு 20ஆம்புலன்ஸுகளில் உதவிப்பொருட்கள் அனுப்பியமைக்காக 19 போலீஸ் அதிகாரிகள் (BARAKA CITY) க்குள் தடாலடியாக நுளைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது உங்களுக்கு தெரியுமா.....?
"I AM NOT CHARLIE "என்று சொன்னதற்காக '8'வயதான முஹம்மத் பிரான்ஸியப் போலீசாரால் விசாரிக்கப்பட்டதை கேள்விப்பட்டீர்களா.....?
தனது 5 பிள்ளைகளும் தன்னை விட்டுப்பிரிக்கப்பட்டு தனது கணவனும் பிரான்சு போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது கண்ணீர் விட்டு அழுத சகோதரி (AICHA M SANI) ன் கண்ணீரில் ந னைந்திருக்கிறீர்களா.....?
லாயிலாக இல்லல்லாஹ் என்று எழுதப்பட்ட கொடியை தனது புத்தகக்கடையில் தொங்கவிட்டதற்காக பிரான்ஸில் வழக்கு தொடரப்பட்ட 59 வயதான அந்த முஸ்லீம் சகோதரனின் செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா.....?
இல்லையெனில்,
இவற்றையெல்லாம் தெளிவாக தெரிந்து கொண்டதன் பின்னர்,
பிரான்ஸிய காலணித்துவத்தில் ஆப்பிரிக்க முஸ்லீம்களின் குறிப்பாக அல்ஜீரிய முஸ்லீம்களின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்த்ததன் பின்னர்,
ஏன் பிரான்சில் ஒரு சிலர் கொல்லப்பட்டால் உடனே உங்களுக்கு தெரிய வருகிறது.அதே நாட்டில் முஸ்லீம்களுக்கு நடந்த நான் மேலே கூறிய எதுவும் உங்களுக்குத் தெரியாமல் போகிறது என்ற கேள்விக்கு முடியுமானால் விடையொன்றை தேடிப்பார்த்ததன் பின்னர்,
பலஸ்தீனில் ஒவ்வொரு நாளும் கொத்துக் கொத்தாய் கொல்லப்படும் நம் உடன் பிறப்புகளுக்காக ஒரு பலஸ்தீனக் கொடியை (PROFILE PICTURE) ஆக வைப்பதற்கு ஏன் (FACE BOOK) அனுமதிப்பதில்லை என்ற கேள்விக்கும் ஒரு பதிலைத் தேடிக்கொண்டதன் பின்னர்,
சிரியாவில் சீரழியும் ஒவ்வொரு முஸ்லிமின் நிலையை அறிய "I AM SAFE "என்ற ஒரு "BUTTON " யை ஏன் FACE BOOK ஆல் உருவாக்க முடியாது என்று யோசித்த பின்னர்
இஸ்லாமிய அகீதாவில் "அல் வலா வல் பறா " என்ற கோட்பாடு என்ன சொல்கிறது என்றாவது தெரிந்த கொண்டதன் பின்னர்,
சூறா மும் தஹினாவனதும், சூறா காபிரூனினதும் சரியான விளக்கத்தை தெரிந்து கொண்டதன் பின்னர்.
தாயையும் இழந்து, தந்தையையும் இழந்து 50வருடங்களுக்கு மேலாக அநியாயமாகக் கொல்லப்படும் ஒவ்வொரு பலஸ்தீன உறவுக்கும் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டதன் பின்னர்
உங்கள் புத்தியும், இதயமும் இன்னமும் பிரான்ஸோடு ஒன்றியிருந்தால்
உங்கள் PROFILE PICTURE ல் பிரான்ஸ் கொடியென்ன இஸ்ரேலின் கொடியாகவும் மாற்றுங்கள்.
மாற்றிய கையோடு உங்கள் மனிதாபிமானத்தையும், இஸ்லாமியப் பற்றையும் ஒரு முறை சுய விசாரணை செய்து கொள்ளுங்கள்.
this article written by :razi muhammadh jabir.
பலஸ்தீனத்தில் என்று எம்மக்கள் மீது கொலை வெறிதாக்குதல் நிறுத்தப்படும் என்ற ஏக்கத்தோடும்


சகோதரர்கள் துஆ செய்யவும்.

Related Posts: