சஹாரன்பூர் லவ் ஜிஹாத் விவகாரம் .
மதரஸா ஆசிரியருக்கு எதிராக
பணம் கொடுத்து பொய் புகார் கொடுக்க செய்த பாஜக தலைவரின் சதி அம்பலம் .
மதரஸா ஆசிரியருக்கு எதிராக
பணம் கொடுத்து பொய் புகார் கொடுக்க செய்த பாஜக தலைவரின் சதி அம்பலம் .
சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் உத்தரபிரதேச மாநில சஹாரன்பூரில் உள்ள ஒரு மதரஸாவில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய ஒரு இந்து மதத்தை சேர்ந்த பெண் கலீம் என்பவரை திருமணம் செய்து கொண்டு முஸ்லிமாக மதம்மாறினார் . இதையடுத்து அந்த பெண்ணை மதரஸாவில் உள்ளவர்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து அவரை கட்டாய மதமாற்றம் செய்ததாக பாஜக எம்பி யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக தலைவர் வினீத் அகர்வால் ஆகியோர் குற்றம்சாட்டினார்கள் .
இதையடுத்து மீரட் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் . பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது .ஆசிரியர் கலீம் மற்றும் மதரஸாவின் நிர்வாகி ,அவர் மனைவி அவர் பெண் உட்பட சிலரை போலீசார் கைது செய்தனர் . கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த பெண் மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார் .
லவ் ஜிஹாத் என்ற முறையில் முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை மயக்கி அவர்களை கட்டாயமாக மதம் மாற்றுவதாக பாஜக பிரச்சாரம் செய்துவந்தது .
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று சனிக்கிழமை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அந்த பெண்ணை ஆஜர் படுத்தியபோது '' பாஜக வை சேர்ந்த வினீத் அகர்வால் தன் பெற்றோரிடம் ரூ.25.000 கொடுத்து மதரஸா ஆசிரியருக்கு எதிராக பொய் புகார் கொடுக்க சொன்னதாகவும் , தான் மதரஸா ஆசிரியர் கலீம் உடன் செல்லவே விரும்புவதாகவும் தெரிவித்தார் . இதையடுத்து அவர் விருப்பப்படியே அவர் கணவர் கலீமுடன் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது .
