காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்காததால், நாளை நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 29வது ஆண்டு தொடக்கவிழா, சென்னை தியாகராயநகரில் பாமக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அதிமுக அணையும் போதும் எரியும் விளக்கு என்று விமர்சித்தார்.
அதிமுகவையும், திமுகவையும் மக்கள் வெறுத்துவிட்டதாகவும், இனி ஒருபோதும் இரண்டு கட்சிகளையும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் கூறினார். தமிழகத்தில் ஆட்சியமைக்க தகுதியான கட்சி பாமக மட்டுமே என்று கூறிய ராமதாஸ், குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாகவும் கூறினார். குடியரசு துணைத்தலைவர் தேர்தல் குறித்து அப்போது முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.