வியாழன், 20 ஜூலை, 2017

யோகி ஆதித்யநாத் பதவியேற்றப்பிறகு அதிகரித்த குற்றச் சம்பவங்கள்! July 20, 2017

யோகி ஆதித்யநாத் பதவியேற்றப்பிறகு அதிகரித்த குற்றச் சம்பவங்கள்!


உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத்  முதல்வராக பொறுப்பேற்ற 2 மாத கால ஆட்சியில் 729 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

யோகி ஆதித்யநாத் அரசு, பதவியேற்ற முதல் வாரத்திலேயே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. 

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தனி படை அமைக்கப்பட்டது. ஆனால் ஆட்சி அமைத்த மார்ச் 19 முதல் மே 9 வரை, 729 கொலைகள், 803 பாலியல் வன்கொடுமை, 2682 ஆள்கடத்தல் சம்பவங்கள் அங்கு நடைபெற்றுள்ளன. 

உத்தரப்பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக அரசு உத்தரப்பிரதேசத்தை நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக மாற்றுவோம் என தேர்தல் அறிக்கை விடுத்தது. மேலும் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் அவர் பதவியேற்ற பிறகு உத்தரப்பிரதேச மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.