வியாழன், 20 ஜூலை, 2017

​மோடியின் ’இந்து தேசியம்’ போருக்கு வழிவகுக்கும் - குளோபல் டைம்ஸ் July 20, 2017

​மோடியின் ’இந்து தேசியம்’ போருக்கு வழிவகுக்கும் - குளோபல் டைம்ஸ்



டோக்லாம் பகுதியில் இந்திய -சீன படைநிறுத்தம் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. சீனா தொடர்ந்து இந்தியாவுக்கு பல எச்சரிக்கைகளை விடுத்துவருகிறது. இந்நிலையில் சீனாவின் மிக முக்கியமான பத்திரிக்கையான ‘குளோபல் டைம்ஸ்’ இந்த படைநிறுத்தம் குறித்து ஒரு முக்கியமான பதிவை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் மேலோங்கும் ‘இந்து தேசிய உணர்வால்’ சீனாவுக்கு எதிரான மனநிலையை அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ‘இந்தியா சீனாவுக்கு எதிரான ஆழமான அவநம்பிக்கையை ரகசியமாக வைத்துள்ளது. சீனாவை போட்டிகரமான, ஆற்றல் நிறைந்த எதிரியாக இந்தியா பார்க்கிறது. ’முத்துச்சரம்’போல உள்ள இந்தியாவை சூழ்ந்துகொள்ள சீனா முயற்சிக்கிறது என்று இந்தியாவில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

சீனா இந்திய போருக்கு பிறகு சீனாவை கையாளுவதில் ’சில இந்தியர்கள்’ பூஜ்ஜியமாகிவிட்டனர். இந்திய - சீன போர் இந்தியாவில் நீடித்த வலி உணர்வையும், பிரிக்கவே முடியாத முடிச்சையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வளர்ச்சியை இந்தியா துரதர்ஷ்டமாக நினைக்கிறது. சீனாவின் அதிவேக வளர்ச்சி இந்தியாவை அதிகமாக அச்சம் கொள்ள செய்கிறது என்றும் எழுதப்பட்டுள்ளது.
”சீன - இந்திய போரில் இந்தியாவின் தோல்விக்கு பழிவாங்க ‘இந்து தேசியம்’ தூண்டப்படுகிறது. மோடி பிரதமரானது இந்தியாவில் ‘இந்து தேசிய’ உணர்வை அதிகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் ‘இந்து தேசிய’ உணர்வால் மோடி பலனடைகிறார். ஒருபக்கம் அவருடைய புகழை உயர்த்தவும், இந்தியாவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவினாலும், மறுபக்கம் பழமைவாதிகளின் வற்புறுத்தலால் இந்தியாவின் ராஜுய உறவுகளை ‘இந்து தேசியம்’ பாதிக்கிறது. சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிராக செயல்படத் தூண்டப்படுகிறது. சீனாவை இலக்காக வைத்திருக்கும் இந்த படைநிறுத்தம் இந்து தேசியவாதிகளுக்கு ஊக்கமளிக்கவே செய்யப்படுகிறது” என்று பகிரங்கமாக எழுதப்பட்டுள்ளது.

மேலும்,2014ம் ஆண்டு மோடி பிரதமருக்கு வந்த பிறகு அவரால் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க முடியவில்லை என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
’’இந்தியாவின் தேச வலிமை சீனாவைவிட பலவீனமானது. ஆனால், இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இதில் அக்கறை காட்டவில்லை. இந்து தேசிய உணர்வால் சீனாவுடனான இந்திய கொள்கை ‘கடத்தப்பட்டுவிட்டது’. இது இந்தியாவின் சொந்த நலன்களுக்கே ஆபத்தானது. இருநாடுகளுக்கு இடையே போருக்கு வழிவகுக்கக்கூடிய ’இந்து தேசியம்’ குறித்து இந்தியா எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்” என்றும் குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்திய - சீன படைநிறுத்தத்தைக் குறித்து சீனாவில் வெளியாகியுள்ள மிக முக்கியமான பதிவாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இசுலாமியர்களின் நிலை, ‘இந்து தேசிய உணர்வு’ ஆகியவற்றைக் குறித்து எழுதப்பட்டிருக்கும் இப்பதிவு மத்திய பாஜக அரசு குறித்த நேரடியான விமர்சனங்களாக வைக்கப்பட்டுள்ளது. போர் பதற்றச் சூழல் இல்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்து வரும் நிலையில் ‘இந்து தேசியம்’ போருக்கு வழிவகுக்கும் என சீன பத்திரிக்கை குறிப்பிட்டிருப்பது சாதாரணமாக எழுதப்பட்ட ஒரு செய்தியாக எடுத்துக்கொள்ள முடியாது.

Related Posts: