வியாழன், 20 ஜூலை, 2017

குடியரசு தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி! July 20, 2017

குடியரசு தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி!


நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறங்கிய மீராகுமாரைவிட 3 லட்சத்து 34 ஆயிரத்து 730 வாக்குகள் அதிகம் பெற்று ராம்நாத் கோவிந்த வெற்றி பெற்றுள்ளார். 

13வது குடியரசுத் தலைவராக பதவி வகித்து வரும்  பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ந்தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ந்தேதி நடைபெற்றது. அனைத்து மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்குகள் பதிவு செய்தனர். 

நாடெங்கிலும் 32 இடங்களில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் டெல்லியில் இன்று எண்ணப்பட்டன. இதில் மொத்தம் பதிவான வாக்குகளில்  65.65 சதவீத வாக்குகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் பெற்றார். 

அவரை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களம் இறங்கிய மீராகுமாருக்கு 34.35 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதாவது ராம்நாத் கோவிந்திற்கு  7 லட்சத்து 2 ஆயிரத்து 44  மதிப்புடைய 2 ஆயிரத்து 930 வாக்குகள் கிடைத்தன. 

மீராகுமாருக்கு 3 லட்சத்து 67 ஆயிரத்து 314 மதிப்புடைய 1,844 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை குடியரசுத் தேர்தலை நடத்தும் அதிகாரியாகச் செயல்பட்ட மக்களவைச் செயலாளர் அனூப் மிஸ்ரா அறிவித்தார். 

Related Posts:

  • அரசியல் அரசியல் கற்றுக்கொள்ளுங்கள்... அரசியல் பேசுங்கள்.... ஓட்டு வாங்கும் தேர்தல் அரசியல் வேண்டாம்... அது ஒரு மனிதனின் தனித்தன்மையை இழக்க வைக்கும்..... கொள… Read More
  • பெற்றோர்கள் செய்யும் தவறுகள்>> *பிள்ளை தன் தந்தையைப் பார்த்து எனக்கு PHONE வேண்டும் எனக் கேட்டால் தந்தை கேட்கிறார் IPHONE வேண்டுமா?/SAMUNG GALAXY வேண்டுமா? *பெற்றோர்களே! இது ந… Read More
  • "ஜெய் ஹிந்த்" இந்த வார்த்தை. சுகந்திரத்துக்கு முன்பு நடந்த மத கலவரத்தின் போது இந்துக்கள் தங்கள் வெற்றியை கொண்டாட "ஜெய் ஹிந்த்" சொன்னது தான் இந்த வார்த்தை.1924,1935,1947-48ல எல்லா… Read More
  • சென்னை வெள்ளத்தில் பல உயிர்களை காப்பாற்றிய சென்னை வெள்ளத்தில் பல உயிர்களை காப்பாற்றிய சகோதரர் யூனுஸ் அவர்களுக்கு, வீரதீரச் செயலுக்காக அறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது. … Read More
  • குடியரசு தினம் 67வது குடியரசு தினம் கொண்டாடுகிறோம். ஆனால் இன்னும் பயந்து கொண்டு தகுந்த பாதுகாப்புடன் தான் நம் நாட்டின் மூவர்ணம் பூசிய கொடியை ஏற்ற வேண்டிய சூழல். … Read More