வெள்ளி, 21 ஜூலை, 2017

சென்னை அடையாறில் சர்வதேச அளவிலான படகுப் போட்டி! July 21, 2017




சர்வதேச அளவிலான படகுப் போட்டி, சென்னை அடையாறில் உள்ள மெட்ராஸ் போட் கிளப்பில் நடைபெற்று வருகிறது.

தமிழக அளவில் படகு விளையாட்டுகள் பெரிய அளவில் கவனம் பெறாத நிலையில், அதனை வெகுஜன மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக நடைபெற்று வருகிறது இந்த சர்வதேச படகு போட்டி. மெட்ராஸ் போட் கிளப் சார்பில் நடைபெற்று வரும் இந்த போட்டியானது வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பிரிட்டன், ஆஸ்திரியா, கொழும்பு உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். படகு போட்டிகளில் கலந்து கொள்ள மனக் கட்டுப்பாடுகள் அதிகம் தேவை என்கின்றனர் படகு வீரர்கள்.

படகு விளையாட்டுக்கு பல்வேறு நாடுகள் முக்கியத்துவம் அளித்தாலும், இந்தியாவில் போதிய கவனம் பெறவில்லை என வேதனை தெரிவிக்கிறார் மெட்ராஸ் போட் கிளப்பின் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ். 

மேலும் இந்த போட்டி நடைபெறும் அடையாறு ஆற்றில் மாநகரின் கழிவுகள் கலப்பதால்,  சாக்கடை போல் காட்சியளிப்பதாகவும், அதனை சீர் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார். 

படகு விளையாட்டுகளில் சர்வதேச அளவில் பதக்கங்கள் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Posts: