வெள்ளி, 21 ஜூலை, 2017

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் நகைகள் பறிமுதல்! July 21, 2017




திருச்சி விமான நிலையத்தில் 28 லட்சம் மதிப்பிலான கடத்தல் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த மதுரையை சேர்ந்த ஜெயபிரபா மற்றும் ஆகியோர் 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 984 கிராம் தங்கம், 6 தங்க சங்கிலி மற்றும் 12 தங்கவளையல்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

மேலும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த விருதாச்சலத்தை சேர்ந்த மஹாராஜ் பேகம் என்பவரிடம் இருந்து 1.60 லட்சம் மதிப்புள்ள 2 தங்க மோதிரம் ஆகியவற்றை இவர்களிடம் பறிமுதல் செய்த வான் நுண்ணறிவு பிரவு சுங்க அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts: