
வங்காள மொழியைத் திணிப்பதாகக்கூறி மேற்கு வங்க மாநிலத்தின் கூர்காலேண்ட் பகுதியில் கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் கூர்காலேண்ட் பகுதியில் நடக்கும் கலவரங்களுக்கு மம்தா பேனர்ஜியை குற்றம்சாட்டினார். தன்னுடைய மொழிக்கொள்கையும், அரசு விவகாரங்களையும் கூர்காலேண்ட் பகுதி மக்கள் மீது மம்தா திணிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளித்த மம்தா பேனர்ஜி, “ நாங்கள் மத்திய அரசின் சேகவர்கள் இல்லை. மத்திய அரசு மாநில அரசுகளை வேலை செய்ய விடுவதில்லை. பாஜகவை இந்தியாவை விட்டு வெளியேற்றும் திட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கப்படும். 18 எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக இணைந்துள்ளன. இந்த களம் இன்னும் விரிவடையும்” என்று தெரிவித்துள்ளார்.