வெள்ளி, 21 ஜூலை, 2017

போலீஸ் கண்முன்னே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்! July 21, 2017


திருவாடூர் அருகே இளம்பெண் கொலை வழக்கில் தொடர்புடைய தோழி, போலீசாரின் கண்முன்னே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புலியூர் காட்டுசாகையை சேர்ந்த திவ்யா என்ற இளம்பெண், சென்னை அப்போலோவில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த மே மாதம் 8ம் தேதி சித்தப்பா வீட்டிற்கு சென்று, சென்னை திரும்புவதாக புறப்பட்ட பின்னர், அவர் மாயமாகியுள்ளார்.

இது குறித்து காடாம்புலியூர் காவல் நிலையத்தில் திவ்யாவின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காணாமல் போன நர்ஸ் திவ்யாவின் செல்போனில் இருந்து கடைசியாக யார் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக திவ்யாவின் தோழி சித்ராவிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம், சித்ரா பிடி கொடுக்காமல் பேசி வந்துள்ளார். 

சித்ரா முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சித்ரா மீது போலிசுக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது. சித்திராவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், மதுவில் விஷம்கலந்து திவ்யாவை கொன்று, அவரை திருவாடூர் அருகே கெடிலம் ஆற்றில் கொன்று புதைத்ததாக கூறியுள்ளர். 

திவ்யாவின் செல்போனை ஒரு இடத்தில் ஒளித்து வைத்திருப்பதாகவும் அதை எடுத்து தருவதாகவும் கூறி கீழ் காங்கிருப்பு பகுதிக்கு சென்ற திவ்யா, திடீரென்று போலீசார் கண்முன்னே அங்கிருந்த 300 அடி ஆழம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து சித்ராவின் உடலை கிணற்றிலிருந்து மீட்ட போலீசார் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் ஆற்றில் புதைக்கபட்ட திவ்யாவின் உடலை கண்டறிந்து, அதனை தோண்டி எடுக்கும் பணியையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர். 

Related Posts: