திங்கள், 10 ஜனவரி, 2022

தமிழகத்தில் 50 ஆயிரத்தை தாண்டிய ஆக்டிவ் கேஸ்கள்… கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா?

 10 1 2022 தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்துகொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 12,895 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதில், 50 விழுக்காடு சென்னையில் தான் சிகிச்சை பெறுகின்றனர்.

மற்ற 25,700 பேர் அவர்களது மாவட்டங்களில் சிகிச்சை பெறுகின்றனர். அதிலும், 10.5 சதவீதம் மக்கள் தான் மருத்துவமனை அல்லது கொரோனா பராமரிப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சைபெறுகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஏழு சதவீதம் படுக்கைகள் தான் நிரம்பியுள்ளது. மற்ற அனைவரும் வீட்டு தனிமையில் உள்ளனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், “ராஜீவ் காந்தி மற்றும் கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 500 கொரோனா நோயாளிகளில், 40 சதவீதம் பேருக்கு தான் ரெம்டெசிவிர் மருந்து சிகிச்சை தேவைப்படுகிறது. மற்றவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திட வசதி இல்லாத காரணத்தால், இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை கொரோனா பாதிப்புக்கு 12 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்து 855 ஆக உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு தினசரி விதிசம் 16.6ஆக உயர்ந்துள்ளது. அண்டை மாவட்டங்களான, செங்கல்பட்டில் 14சதவீதமும், திருவள்ளூரில் 12.5 சதவீதமும் பாதிப்பு பதிவாகுகிறது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, 1,250 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றுடன் ஊரடங்கு காலம் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பதா குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-corona-active-cases-crossed-50-thousand-count/