சனி, 8 ஜனவரி, 2022

இரவு நேர ஊரடங்கு : போலீசார் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? டிஜிபி அறிவுரை

 7 1 2022 இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும நிலையில், பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு  வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியானது.

அதன்படி மறு உத்தரவு வரும் வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர அனுமதி என்றும், வெளியில் வரும் பொதுமக்கள் முககவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பி்ன்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

மேலும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய 3 நாட்களும் வழிபாட்டு தலங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு, உணவகங்கள், அழகுநிலையம், சலூன் கடைகள் உள்ளிட்ட இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் காவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி

அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வானங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது.

அடையாள அட்டையுடன் பயணிக்கும் பயணாளர்களை உடனடியாக அனுமதிக்க வேண்டும்

நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் அழைப்பு கடிதத்தை காண்பித்தால் அனுமதிக்க வேண்டும்.

அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர் வேலை முடிந்து திரும்புவோர் பணி முடிந்து திரும்புவோர அனுமதிக்க வேண்டும்.

ஊரடங்கு வாகன சோதனையின் போது கனிவாகவும், மனிதநேயத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.

பத்திரிக்கை, மருத்துவம், பால், மின்சாரம், சரக்கு மற்றம் எரிபொருள் உள்ளிட்ட அதியாவசிய பணியாளர்களை அனுமதிக்க போலீசாருக்கு அறிவுரை என்று காவல்துறை டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-police-dgp-new-instruction-to-police-for-night-lockdown-394014/