சனி, 7 மே, 2022

வங்கக்கடலில் உருவாகும் புயல்; தமிழத்தில் 4 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம்

 7 5 2022

rainfall alert, tamil nadu weather satellite live, tamil nadu weather forecast 4 day, weather forecast chennai, weather forecast chennai cyclone, weather in chennai for next 4 days weatherman, chennai weather forecast 15 days, low pressure, weather in chennai for next 5 days

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், இன்று (மே 6) காலை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (மே 7) மாலை காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது நாலை மறுநாள் (மே 8) மேலும் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து மே 10ம் தேதி ஆந்திரா – ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலி புயல் உருவாகி வருவதால், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (மே 6) தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மே 7 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் அதனை ஒடிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானைல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மே 8, மே 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றால், மே 10ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/india/jammu-kashmir-delimitation-commission-issues-final-notification-450721/