சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி பிதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரலில் தமிழரின் பெருமையைக் கூற நடன நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வரவேற்புரையாற்றி அனைவரையும் வரவேற்றார்.
இதையடுத்து, செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி பற்றி கமல்ஹாசன் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் பெருமை மற்றும் தமிழர்களின் பெருமை பற்றி காட்சிப்படுத்தப்பட்டது. கமல்ஹாசன் குரலில், “கல்தோண்றா மண் தோன்றா காலத்தே வாளோடு தோன்றிய மூத்தகுடி என்ற வாசகத்துடன் கமல்ஹாசன் அறிமுகத்தைக் கூறினார். மேலும், தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முதலில் பாசனம் செய்து விவசாயம் செய்ததைக் கூறுகிறார். மேலும், ராஜராஜசோழன் கடல் கடந்து நாடுகளை வென்றதும், குடவோலை முறையில் முதலில் ஜனநாயக ரீதியாக பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் கமல்ஹாசன் குரலில் ஒலித்தது.
மேலும், கமல்ஹாசன் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறு தழுவுதல் பற்றி கூறுகிறது. இது மிருகங்களுக்கு எதிரான போட்டியல்ல, மனிதனும் விலங்குகளும் இணைந்து விளையாடுகிற போட்டி. மேலும், தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் குறித்து கமல்ஹாசன் கூறுகிறார். அவருடைய குரல் பின்னணியில் ஒலிக்க எல்லாமே நடன நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டது.
தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகள் பற்றி கமல்ஹாசன் கூற, தெருக்கூத்து, கரகாட்டம் உள்ளிட்ட கலைஞர்கள் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, ஒற்றைக்கல்லால் ஆன சுந்திரம் கோயில், மாமல்லபுரம் ஒற்றைக்கல்லால் ஆன யானை ஆகியை தமிழர்களின்
3,000 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியர்கள் தமிழ்ச்சங்கம் அமைத்தார்கள். உலகத்தில் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். தமிழ் நிலப்பகுதியை குறிஞ்சி,முல்லை, மருந்தம், நெய்தல், பாலை என ஐந்திணைகளாக பிரிக்கப்பட்டதைக் கூறுகிறார்.
நியாயம் கேட்பதற்காக பாண்டிய மன்னன் அவைக்கு வந்த கண்ணகி, சிலம்பினை உடைத்துப் பார்ப்போம் என்று கண்ணகி சிலம்பை உடைத்து நியாயம் கேட்கும் சிலப்பதிகார காப்பியக் காட்சி நிகழ்த்தப்பட்டது. இறுதியில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளை கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
இதையடுத்து, மிகவும் பிரபலமான எஞ்ஜாய் எஞ்சாமி பாடலை திதீ பாட நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து பேசிய, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “ஒரிசாவில் ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் ஆக்கினார். உலகம் முழுவதும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று முழக்கமிட்டார். வாரணாசியில் இறுக்கை அமைத்து தமிழகத்தை மேலும் பெருமைப்படுத்தினார்.
தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய செஸ் விளையாட்டை நடத்துவதற்கு பிரதமர் மோடி, மாண்புமிகு ஸ்டாலின் ஆகியோர் இணைந்து செயல்பட்டுள்ளனர். தீபிகா பள்ளிக்கல் உளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து பாராட்டியதை எல். முருகன் கூறினார். இதையடுத்து, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசினார்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி 75 நாடுகளில் வலம் வந்ததைக் குறிப்பிடப்பட்டது. இது இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் குறிப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உலக செஸ் சாம்பியன் விஸ்வநாத் ஆனந்த் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மேடைக்கு கொண்டு வந்து பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, பிரக்ஞானந்தா செஸ் ஒலிம்பியாட் ஜோதியை எடுத்துச் சென்று நிகழ்ச்சியைத் தொடங்கினார்.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் தொடங்கி இருக்கிறது. மாமல்லபுரத்தில் ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chess-olympiad-2022-ceremony-pm-modi-cm-mk-stalin-486148/