ஞாயிறு, 31 ஜூலை, 2022

இலங்கை நிலை இந்தியாவுக்கு ஏற்படுமா?–ரகுராம் ராஜன் விளக்கம்

 

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளின் பொருளாதார நிலை இந்தியாவுக்கு ஏற்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவு இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பாக பணியாற்றி உள்ளதாகக் கூறியுள்ளார். நமது நாடு வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடன் அளவும் குறைவுதான் என குறிப்பிட்டுள்ள ரகுராம் ராஜன், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நிலை இந்தியாவுக்கு ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வருவதாகக் கூறிய ரகுராம் ராஜன், கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியதால், பணவீக்கம் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கான பணவீக்கம்தான் அதிகமாகி இருப்பதாகத் தெரிவித்த ரகுராம் ராஜன், சர்வதேச அளவில் இந்த பணவீக்கம் குறையும்போது இந்தியாவிலும் குறையும் என குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை 22 முடிந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 571.56 பில்லியன் டாலராக உள்ளது.


source https://news7tamil.live/will-india-face-sri-lanka-pakistan-like-economic-crisis-raghuram-rajan-reply.html