கடந்த ஜூலை 18-ந் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில். பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்கலாம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், நாட்டின் அடுத்த குடியரசு தலைவர் யார் என்பதை நிர்ணையிக்கும் தேர்தல் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது இதில் பாஜக சார்பில் பழங்குடியின பெண்ணான திரௌபதி முர்மு மற்றுமு் எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர்.
எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் வாக்களிக்கும் இந்த தேர்தலுககாக நாடு முழுவதும் 30-க்கு மேற்பட் இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குச்சீட்டு முறைப்படி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலையில் இருந்த நிலையில்,மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, திரௌபதி முர்மு 50 சதவீத வெற்றியை உறுதி செய்திருந்தார். இறுதியாக திரௌபதி முர்மு 5,77,777 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 2,61,062 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் வெற்றியை உறுதி செய்த திரௌபதி முர்மு நாட்டின் 15-வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார்.
இதன் மூலம் இந்தியாவின் முதல் குடிமகளாகவும், இந்தியாவின் ஆயுதப் படைகளின் தளபதியாகவும் ஆனா முதல் பழங்குடியின மற்றும் இரண்டாவது பெண் ஆவார். முர்மு 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஒடிசா சட்டமன்றத்தில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். மேலும் 2000 முதல் 2004 வரை முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜேடி பிஜேபி கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றினார். தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார்.
இந்நிலையில், திரௌபதி முர்முவின் வெற்றி உறுதி செய்யப்பட்டவுடன் அவரை எதிர்த்து போட்டியிட்டு சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் முர்முவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். “2022 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீமதி திரௌபதி முர்மு வெற்றி பெற்றதற்கு எனது சக குடிமக்களுடன் இணைந்து வாழ்த்துகிறேன். குடியரசின் 15வது ஜனாதிபதியாக அவர் அச்சமோ ஆதரவோ இல்லாமல் அரசியலமைப்பின் பாதுகாவலராக செயல்படுவார் என இந்தியா நம்புகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/droupadi-murmu-makes-history-indias-first-tribal-woman-president-482768/